

டோக்கியோ
ஆசிய பாரா போட்டிகளில் மகளிர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்திய ஜோடி பதக்கம் உறுதி செய்துள்ளது.
ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் மனசி ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் ஆகியோர் சீனாவின் யூமெய் லியூ மற்றும் டாங்டாங் லி-யை எதிர்கொண்டனர்.
2023-ம் ஆண்டு ஹாங்ஜவ்வில் நடந்த போட்டியில், இந்திய ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. இந்த சூழலில், இந்த போட்டியில், 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி வெற்றி பெற்றது. அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு ஏதேனும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.