ஆசிய பாரா விளையாட்டு: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற பிரீத்தி

இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய பாரா விளையாட்டு
Published on: 

ஐச்சி-நகோயா,

ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பிரீத்தி பால் வெள்ளி வென்றுள்ளார்.

100 மீட்டர்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய டி35 பிரிவு இறுதிப்போட்டியில் பங்கேற்ற பிரீதி பால், பந்தய தூரத்தை 13.98 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இப்போட்டியில் சீனாவின் சோ சியா தங்கப் பதக்கத்தை வென்றார்.

இரண்டு வெள்ளிப் பதக்கங்கள்

இதற்கு முன்னதாக, பெண்களுக்கான 200 மீட்டர் டி35 ஓட்டப்பந்தயத்திலும் பிரீத்தி பால் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அந்தப் போட்டியில் அவர் 29.53 விநாடிகளில் இலக்கை கடந்தார்.

48 ஆக உயர்வு

பிரீதி பால் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com