ஆசிய பாரா விளையாட்டு: ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற மஞ்சித்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஈட்டி எறிதல்
Published on: 

ஐச்சி-நகோயா,

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் மஞ்சித் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

வெள்ளி வென்ற மஞ்சித்!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆண்களுக்கான எப்12/எப்13 ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் மஞ்சித் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

இப்போட்டியில் மஞ்சித் தனது இரண்டாவது முயற்சியில் 61.03 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தொடர்ந்து பதக்கங்கள்

முன்னதாக மஞ்சித் ஆசிய பாரா விளையாட்டுத் தகுதி போட்டியில் 59.08 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார். தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 61.03 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com