ஆசிய பாரா விளையாட்டு: வட்டு எறிதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியா

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
பிரணவ் சூர்மா
Published on: 

ஐச்சி-நகோயா,

ஆசிய பாரா விளையாட்டு வட்டு எறிதலில் இந்தியாவின் பிரணவ் சூர்மா தங்கம் வென்றுள்ளார்.

வட்டு எறிதல்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பிரணவ் சூர்மா ஆசிய சாதனையுடன் தங்க பதக்கத்தை வென்றுள்ளாார். மற்றொரு இந்திய வீரரான ராம் ரதன் சிங் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.

தங்கம் வென்ற பிரணவ்

பிரணவ் சூர்மா 11.66 மீட்டர் தூரம் வட்டு எறிந்து புதிய ஆசிய சாதனையைப் படைத்தார். தனது நான்காவது முயற்சியில் இந்தத் தூரத்தை எட்டிய அவர், 932 ராசா புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

ராம் ரதன் சிங்கிற்கு வெள்ளி

இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ராம் ரதன் சிங், 10.35 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 809 ராசா புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஈரானின் அலிரேசா ஹேமாமி 20.20 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com