ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்

இந்தியா மேலும் 6 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்தை வென்றது.
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்
Published on

புதுடெல்லி,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வந் தது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடந்த இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 6 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்தை வென்றது. இந்த போட்டியில் இந்தியா 51 தங்கம், 23 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 94 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com