ஆசிய துப்பாக்கி சுடுதல்: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

கஜகஸ்தான் வீராங்கனை தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றார்.

ஆசிய துப்பாக்கி சுடுதல்: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்
Published on

புதுடெல்லி,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைப்பிரிவில் இந்தியாவின் ஆக்ரிதி தாஹியா வெள்ளிப்பதக்கமும் (354.2 புள்ளி), அஞ்சும் சோப்ரா வெண்கலப்பதக்கமும் (340.4 புள்ளி) வென்றனர்.

கஜகஸ்தான் வீராங்கனை சோபியா ஷூல்ஜென்கோ 358.2 புள்ளிகளுடன் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 39 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்க லம் என 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com