ஆசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை அபிநயா வெள்ளிப்பதக்கம் வென்றார்

ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தாஷ்கென்ட்,

ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. 44 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபிநயா 11.82 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பக்ரைன் வீராங்கனை லைலா கமால் 11.77 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். வெள்ளிப்பதக்கம் வென்ற அபிநயா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com