காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்கள் குவித்து 4-வது இடத்தை பிடித்தது.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
Published on

காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டிலும் அசத்துவோம் என குத்துச்சண்டை நட்சத்திரங்கள் தெரிவித்தனர்.

டெல்லியில் வரவேற்பு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்கள் குவித்து 4-வது இடத்தை பிடித்தது. தொடக்கத்திலேயே தங்களது போட்டிகளில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே இந்தியா வந்துவிட்டனர். இந்த நிலையில் ஒரு சிலர் தவிர எஞ்சிய இந்திய குழுவினர் அனைவரும் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினர். பதக்கத்துடன் வந்திறங்கிய அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் மாலை அணிவித்து, வாத்தியங்கள் முழங்க பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குத்துச்சண்டையில் மட்டும் இந்தியா 7 தங்கம், 3 வெள்ளிப்பதக்கத்தை அறுவடை செய்து வரலாறு படைத்தது. காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். பிரீத்தி பவார், ஜெய்ஸ்மின் லம்போரியா, சாக்ஷி சவுத்ரி, பிரியா கங்காஸ், அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ் பன்ஹால் ஆகியோர் தங்கப்பதக்கமும், ஜதுமணி சிங், லவ்லினா, நரேந்தர் பெர்வால் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் உச்சிமு கர்ந்தனர். அவர்களை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய விளையாட் டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மத்திய அரசு சார்பில் தங்கப்பதக் கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும், வெள்ளிப்பதக்கம் கைப்பற் றியவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கினார்.

குத்துச்சண்டையில் நம்பிக்கை

முன்னதாக 'தங்க மங்கை' பிரீத்தி பவார் நிருபர்களிடம் கூறுகையில், 'தங்கம் வென்றதும் இவ்வளவு பெரிய மேடையில் நமது தேசிய கீதம் இசைக்கப்படுவதை கேட்பது எப்போதும் மறக்க முடியாத ஒன்றாகும். ஆனால் இப்போது எனது முழு கவனமும் ஆசிய விளையாட்டு போட்டிக ளுக்கு (அடுத்த மாதம் 19-ந்தேதி ஜப்பானில் தொடக்கம்) மாறி விட்டது. அங்கு இன்னொரு தங்கப்பதக்கத்தை வெல்ல விரும்புகிறேன்' என்றார்.

சர்வதேச குத்துச்சண்டையில் இங்கிலாந்தின் ரூபி ஒயிட்டை தோற்கடித்த முதல் வீராங்கனை என்ற சிறப்புக்குரிய சாக்ஷி சவுத்ரி கூறுகையில், 'நான் ஒரு கனவு உலகில் வாழ்வது போல் உணர்கிறேன். ஒவ்வொரு இரவும் நான் தங்கப்பதக்கம் வெல்வதையும், தேசிய கீதத்தை கேட்பதை யும், இது போன்ற வரவேற்புடன் நாடு திரும்புவதையும் கற்பனை செய்து பார்த்தேன். இப்போது அந்த கனவு நனவானது போன்று உணர்கிறேன். அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டு தான். அதிலும் இதே நிலையை தக்கவைக்க வேண்டும்' என்றார்.

நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்ற ஜெய்ஸ்மின் லம்போரியா கூறுகையில், 'உடல்நலக்குறைவில் இருந்து மீண்ட பிறகு, காமன்வெல்த் போட்டிக்கு முன்பாக 3 வாரங்கள் மட்டுமே பயிற்சி செய்தேன். குத்துச்சண்டை களத்திற்குள் நுழைந்ததும், மற்ற எல் லாவற்றையும் மறந்து விட்டு இந்தியாவுக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் இருந்தது. 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் எனது இறுதி இலக்கை அடைவதற்கான படிக்கட்டுகளாக வர இருக்கும் ஆசிய விளையாட்டும், அதற்கு பிந்தைய போட்டிகளும் அமையும்' என்றார்.

நரேந்தர் பெர்வால் கூறுகையில், 'நாங்கள் ஒவ்வொரு எதிராளியின் ஆட்டத்தையும் வீடியோவில் பார்த்து அதற்கு ஏற்ப எங்களது யுக்திகளை வகுக்கிறோம். இதன்படி திட்டம் 'ஏ' கைகொடுத்தால் அதையே பின்பற்று கிறோம். இல்லாவிட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறோம். கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த வலிமையான எதிராளிகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் ஆசிய விளையாட்டு வேறு விதமான சவால் நிறைந்ததாக இருக்கும். அதற்கு தயாராக இருப்போம்' என்றார்.

மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள்

காமன்வெல்த் விளையாட்டில் இடம் பெற்றிருந்த மாற்றுத் திறனாளிகளுக் கான பந்தயத்தில் இந்தியர்கள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் டி47 பிரிவில் மகுடம் சூடிய இந்திய வீரர் திலிப் காவித் கூறுகையில், 'காமன்வெல்த் போட்டி யில் 100 மீட்டர் ஓட்டத்தில் நான் பங்கேற்றது இதுவே முதல் முறையா கும். இதில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கு அடிக்கடி மழை பெய்தது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இந்த கடினமான சூழலுக்கு ஏற்ப மாற வேண்டி இருந் தது. அடுத்து பாராஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்வதே எனது லட்சியம்' என்றார்.

பெண்களுக்கான குண்டு எறிதலில் (எப்.57 பிரிவு) தங்கப்பதக்கத்தை முத்தமிட்ட ஷர்மிளா தன்கர் கூறும் போது 'தேசத்திற்காக பதக்கம் வெல்வது பெருமிதம் அளிக்கிறது. இந்த செயல்பாடு வரவிருக்கும் போட்டிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது' என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com