தடகளம்: எஸ்.ஆர்.ஒய் பரிசோதனை கட்டாயம்

'எஸ்.ஆ.ர்ஒய்' என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

'எஸ்ஆர்ஒய்' என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது. ஒரு நபரின் பிறவிப் பாலினத்தை கண்டறிவதற்கு இந்த 'எஸ்.ஆர்.ஒய்' பரிசோதனை உதவுகிறது.

ஆணாக பருவ வயதை அடைந்து, பிறகு பெண்ணாக மாறியவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உலக தடகள அமைப்பு தடை விதித்துள்ளது. பிறவியில் ஆணாக இருந்து, பின்னர் பெண்ணாக மாறியோர் மகளிர் பிரிவில் பங்கேற்கும்போது, உடல் ரீதியாக அவர்களுக்கு இயல்பாகவே சாதகமான நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், டோக்கியோவில் செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் பிரிவில் பங்கேற்க விரும்புவோர் 'எஸ்.ஆர்.ஒய்' பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என உலக தடகள அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், அதுதொடர்பான அறிவுறுத்தலை இந்திய தடகள சம்மேளனம், மாநில சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது.

தற்போதைய நிலையில், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பாருல் சவத்ரி (3,000 மீ ஸ்டீபிள்சேஸ்) தகுதிபெற்றிருக்கும் நிலையில், அன்னு ராணி (ஈட்டி எறிதல்) தரவரிசை அடிப்படையில் அந்த வாய்ப்பைப் பெறும் நிலையில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com