ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்; ஆகர்ஷி காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் உக்ரைனின் போலினா புக்ரோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபார்மனா ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்யப் 21-14, 21-11 என்ற செட் கணக்கில் போலினா புக்ரோவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com