

சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் சிட்னியில் நடந்து வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, பெருவின் ஐனிஸ் காஸ்டிலோ உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தகுதி சுற்றில் இந்திய வீரர் சனீத் தயானந்த் தனது 2-வது ஆட்டத்தில் 21-9, 21-16 என்ற நேர் செட்டில் மலேசியாவின் மிங் ஹாங் லிம்மை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு ஏற்றம் கண்டார்.