

புதுடெல்லி,
சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் இருந்த சீனாவின் ஷி யுகி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பி யன்ஷிப்பில் முதல் சுற்றுடன் வீழ்ந்ததால் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளார். இந்தோ னேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி இரு இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 13-வது இடத்திலும் (ஒரு இடம் அதிகரிப்பு). ஆயுஷ் ஷெட்டி 20-வது இடத்திலும் (இரு இடம் உயர்வு) உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தென்கொரியாவின் அன்சே யங் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் பி.வி.சிந்து 9-ல் இருந்து 10-வது இடத் துக்கு பின்தங்கினார். உன்னதி ஹூடா 25-வது இடத்திலும், தன்வி ஷர்மா 26-வது இடத்தி லும் உள்ளனர்.
பெண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் திரிஷா ஜாலி காயத்ரி கோபிசந்த் ஜோடி 12 இடங்கள் எகிறி 27-வது இடத்தை பெற்றுள்ளனர். உலக பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்ததன் மூலம் இந்த ஏற்றம் அவர்களுக்கு கிடைத்துள்ளது.