பராக் சர்வதேச செஸ்: குஜராத்தியை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பராக்,

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள்.

இதன் 5-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சக நாட்டவரான விதித் குஜராத்தியை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 52-வது நகர்த்தலில் குஜராத்தியை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ், உள்ளூர் வீரரான டேவிட் நவராவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 5 சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com