களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்


களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 1 April 2025 9:00 AM IST (Updated: 1 April 2025 9:00 AM IST)
t-max-icont-min-icon

குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கிய நைஜீரிய வீர‌ர் களத்திலேயே உயிரிழந்தார்.

அக்ரா,

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கானா தலைநகர் அக்ராவில் நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல், கானா வீரர் ஜான் ம்பங்கு என்பவரை எதிர்கொண்டார்.

இந்த மோதலின் 3-வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக தாக்கிக்கொண்டு இருந்த போது, நைஜீரிய வீரர் கேப்ரியல் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து களத்திலேயே உயிரிழந்தார்.

குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கிய வீரர் களத்திலேயே உயிரிழந்த நிகழ்வு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story