

புடாபெஸ்ட்
புடாபெஸ்ட் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்திய வீரர் வேலவன் செந்தில் குமார் காலிறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வரும் புடாபெஸ்ட் ஸ்குவாஷ் ஓபன் போட்டியில், உலக தர வரிசையில் 54-வது இடம் வகிக்கும் இந்தியாவை சேர்ந்த வேலவன் செந்தில் குமார், மலேசியாவை சேர்ந்த எய்ன் யோவ் இங்கை காலிறுதியில் எதிர்கொண்டார்.
இந்த போட்டியில், தொடக்கம் முதல் வேலவன் அதிரடியாக விளையாடினார். இதனால், மொத்தம் 53 நிமிடங்கள் நடந்த போட்டியின் முடிவில், 11-2, 11-9, 11-8 என்ற புள்ளி கணக்கில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எய்னை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
அடுத்து இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில், இந்தியாவின் வீர் சோத்ரானியை அவர் எதிர்கொள்கிறார். அதில் வெற்றி பெறுபவர் இறுதிப்போட்டிக்கு செல்வார். இதனால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.