

டொராண்டோ,
கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் டயானா ஸ்னைடெரை (ரஷியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஸ்விடோலினா அரையிறுதியில் ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார்.