தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.

விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com