சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனுபமா வெற்றி

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நேற்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஷென்ஜென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 24-22, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சிகோ அவ்ராவிடம் தோல்வி கண்டார்,

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் 10-21, 18-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாமோகா மியாஜகியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆனால், மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா 21-17, 8-21, 22-20 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீராங்கனையான பீவென் ஜாங்குக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com