சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதியில் தோல்வி

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வியடைந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஷென்ஜென்,

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை, தென்கொரியாவின் ஜின் யோங்- சியோ செங் ஜாய் இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-14, 16-21 என்ற செட் கணக்கில் ஜின் யோங்- சியோ செங் ஜாய் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. இந்த ஆட்டம் ஒரு 1 மணி 14 நிமிடம் நடந்தது. இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com