சீனா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் வெற்றி

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.

சீனா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் வெற்றி
Published on

ஷாங்காய்,

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-17, 5-21, 21-17 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com