காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் ராகுலுக்கு தங்கம்

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் ராகுல், தங்கம் வென்றார்.#CWG2018 #GC2018
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் ராகுலுக்கு தங்கம்
Published on

கோல்டு கோஸ்ட்

21வது காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில், மல்யுத்த போட்டியின் மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். கனடாவின் வீராங்கனையான டயானா வெய்கர் 2-5 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியனான பபிதா குமாரியை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஆடவருக்கான 57 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ராகுல், தங்கம் வென்றார்.

இதற்கு முன் நடந்த மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை தேஜஸ்வினி சாவந்த் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

13 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது.

இதேபோன்று சுஷில் குமார், ராகுல் அவாரே, கிரண் ஆகியோர் இந்தியாவிற்கான பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com