காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் இந்திய வீரர் ஹரிஷ் சிங் தங்கம் வென்றார்

இந்திய ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டி:  ஜூடோவில் இந்திய வீரர் ஹரிஷ் சிங் தங்கம் வென்றார்
Published on

கிளாஸ்கோ,

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங் ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸ் -ஐ 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஹர்ஷ் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் மேடையில் இந்திய ஜூடோவுக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை சேர்த்துள்ளார். முன்னதாக மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com