

ஆமதாபாத்,
முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.
இருபாலரும் தலா இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோது கின்றன. 2-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 44-30 என்ற புள்ளி கணக் கில் உகாண்டாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை தனதாக்கியது. இதேபோல் பெண்கள் பிரிவில் இந்திய அணி 32-16 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.