காமன்வெல்த் கபடி: இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன்

உகாண்டாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணியும் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் கபடி: இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன்
Published on: 

காந்தி நகர்,

காமன்வெல்த் கபடி இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர்

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்தியாவும், கென்யாவை வீழ்த்திய இலங்கையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்தியா சாம்பியன்

இந்நிலையில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் 54-20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக, காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் உகாண்டாவை 35-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

X