

ஆமதாபாத்,
முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன. இருபாலரும் தலா இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு மோதுகின்றன.
பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவை (ஏ பிரிவு) சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 73-13 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை துவம்சம் செய்தது. இதேபிரி வில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உகாண்டா அணி 61-12 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை ஊதித் தள்ளியது.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இந் திய அணி 46-26 என்ற புள்ளி கணக்கில் வென்றது.