காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றார்

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது. #CWG2018
காமன்வெல்த் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன்; ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றார்
Published on

கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கம் வென்றார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த விளையாட்டு திருவிழாவின் 11-வது நாளான இன்று இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மலேசியாவின் லீ சாங் வெய்யை எதிர் கொண்டார். இதில் 21-19, 14-21, 14-21 என்ற செட்களில் லீ சாக் வெய்யிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் வெள்ளிபதக்கத்தை கைப்பற்றினார்.

இருப்பினும் காமன்வெல்த் போட்டிகளில் இது கிடாம்பி ஸ்ரீகாந்த் பெரும் முதல் பதக்கமாகும். மேலும் உலகதர வரிசையில் ஸ்ரீகாந்த் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்தியா 26 தங்கம், 19 வெள்ளி, 20 வெண்கலம் உள்பட 65 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com