காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டி; தங்கம் வென்ற இந்திய வீரர்

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டி; தங்கம் வென்ற இந்திய வீரர்
Published on

தாஷ்கன்ட்,

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் 67 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் பளுதூக்குதல் வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா கலந்து கொண்டார்.

அவர் மொத்தம் 305 கிலோ (141 கிலோ மற்றும் 164 கிலோ) எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று, ஸ்னாட்ச் பிரிவில் அவர் 141 கிலோ எடையை தூக்கி புதிய தேசிய சாதனையையும் படைத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com