தங்கப் பதக்கம் வென்ற கபடி வீராங்கனை ரொக்கப்பரிசு பட்டியலில் நீக்கப்பட்டதால் சர்ச்சை

இந்த கட்டத்தில் இமாசலபிரதேச அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது' என்று அதிருப்தி தெரிவித்தார்.
தங்கப் பதக்கம் வென்ற கபடி வீராங்கனை ரொக்கப்பரிசு பட்டியலில் நீக்கப்பட்டதால் சர்ச்சை
Published on: 

நாஹன்,

ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் இந்திய பெண்கள் அணி மீண்டும் தங்கப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இமாசலபிரதே சத்தை சேர்ந்த புஷ்பா ராணா, ஜோதி தாக்குர். பாவ்னா தாக்குர். முன்னாள் கேப்டனும், அர்ஜூனா விருது பெற்றவருமான ரிது நெகி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு கடந்த 5-ந் தேதி அறிவித்தார்.

அந்த விருதுக்கான பட்டியலில் ரிது நெகி பெயர் இல்லை. மற்ற 3 கபடி வீராங்கனைகள் மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ரேணுகா தாக்குர் ஆகியோரது பெயர் இடம் பெற்று இருந்தது. இமாசலபிரதேசத்தில் உள்ள ஷில் லாய் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான ரிது, அரியானாவை சேர்ந்த கபடி வீரர் ரோகித் குலியாவை கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தார். 2023-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந் திய பெண்கள் கபடி அணியின் கேப்டனாக இருந்த ரிதுக்கு அப்போது இமாச லபிரதேச மாநில அரசு சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இப் போது அவரது பெயர் கடைசி நேரத்தில் விருதுக்கான பட்டியலில் இருந்து நீக் கப்பட்டது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இது குறித்து ரிது நெகி கூறுகையில், 'ஒரு வாரத்துக்கு முன்பு வரை நான் இமாசலபிரதேசத்தின் மகளாகவே கருதப்பட் டேன். முதல்-மந்திரி, முகநூல் பக்கத்தில் கூட வாழ்த்து செய்தி பகிர்ந்திருந்தார். அடுத்த இரண்டு நாட்களில் திடீரென ஏற்பட்ட இந்த மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து 3 ஆசிய விளையாட்டு போட்டிகளில் நாட்டுக்காக பங்கேற்று 2 தங்கம். ஒரு வெள்ளி வென்ற என்னை ஏன்? இப்படி அவமரியாதையாக நடத்துகிறார்கள். நான் இந்தியன் ரெயில்வேயில் பணிபுரிந்தாலும், உள்நாட்டு போட்டிகளில் இமாசலபிரதேசத்துக்காவே விளையாடி வருகி றேன். எனது விளையாட்டு வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இமாசலபிரதேச அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது' என்று அதிருப்தி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com