காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #GC2018 #CWG2018 #SushilKumar
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை
Published on

கோல்டு கோஸ்ட்

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் இன்றைய போட்டியில், மகளிருக்கான 53 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில், இந்தியாவின் பபிதா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் ராகுல் அவாரே தங்கப் பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் 74 கிலோ ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கம் வென்றார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது.

14 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com