

ஒடென்சே,
மொத்தம் ரூ.9 கோடி பரிசுத் தொகைக்கான டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் நேற்று தொடங் கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 21-19 என்ற நேர்செட்டில் அர்னாட் மெர்க்லேவை (பிரான்ஸ்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் 18-21, 21-13, 15-21 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சோய் டின் சென்னிடம் போராடி வீழந்தார்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜெர்மனியின் இவோன் லீயுடன் மோதினார். இந்த மோதலில் சிந்து 21-13, 23-25, 19-21 என்ற செட் கணக்கில் இவோன் லீயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறி னார். அதே சமயம் தன்வி ஷர்மா 21-17, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் நட்சுகி நிடைராவை (ஜப்பான்) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.