டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி அடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 14-21 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அயா ஒஹோரியிடம் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-9, 21-7 என்ற நேர்செட்டில் அனுபவம் வாய்ந்த சக நாட்டு வீரர் சவுரப் வர்மாவுக்கு அதிர்ச்சி அளித்தார். பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி இணை தோல்வி கண்டு நடையை கட்டியது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி ஏமாற்றம் அளித்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com