உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப்... இந்திய வீரர் தேவ்ரத் வெண்கலம் வென்று அசத்தல்

இந்திய அணி 5-வது இடத்தைப் பிடித்தது.
தேவ்ரத் சிங் ராஜாவத்
Published on: 

அகாதிர்,

2026 உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தேவ்ரத் சிங் ராஜாவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப்

சர்வதேச பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு (ISF) சார்பில் உலக பள்ளிகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 2 முதல் 8-ம் தேதி வரை மொராக்கோவின் டகாசூட் - அகாதிர் பகுதியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 103 வீரர்கள் பங்கேற்றனர்.

அசத்திய இந்திய வீரர்

இந்தப் போட்டியின் 15 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் தேவ்ரத் சிங் ராஜாவத் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

போட்டியின்போது பலத்த காற்று மற்றும் தொடர்ந்து பெய்த மழை காரணமாக வீரர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டனர். இருப்பினும், தேவ்ரத் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

இந்திய அணிக்கு 5-வது இடம்

தனிநபர் பிரிவில் தேவ்ரத் பதக்கம் வென்ற நிலையில், ஒட்டுமொத்த அணிகள் பிரிவிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி 5-வது இடத்தைப் பிடித்தது.

X