மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கிரிக்கெட் போட்டி: குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி

மாவட்ட அளவிலான ‘பி' டிவிஷன் கிரிக்கெட் போட்டி: குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி
மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கிரிக்கெட் போட்டி: குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி
Published on

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் குன்னூர் டான் பிராட்மேன் அணி மற்றும் யாங்கீஸ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யாங்கீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 33 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் ஜீவா 51 ரன்கள், சோமசுந்தரம் 41 ரன்கள் எடுத்தனர். டான் பிராட் மேன் அணியின் பந்து வீச்சாளர்கள் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், நந்தகுமார் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தொடர்ந்து விளையாடிய டான் பிராட் மேன் அணி அணி 26.1 ஓவர்களில் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் மஹபூப்கான் 37 ரன்கள், மேத்யூஸ் 36 ரன்கள் (அவுட் இல்லை) மற்றும் ஆரோக்கிய நாதன் 33 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் குன்னூர் டான் பிராட் மேன் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே போல நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் ஊட்டி சி.எஸ். ஐ பொறியியல் கல்லூரி அணி, கேங் ஸ்டார் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com