

புதுடெல்லி,
காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜூடோ வீராங்கனை துலிகா மான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை கடந்த 12 மாதங்களில் 3 முறை அளிக்க தவறியதால் அவரை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து காமன்வெல்த் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 27 வயதான துலிகா 2022-ம் ஆண்டு காமன் வெல்த்போட்டியில் 78 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக் கம் வென்றவர் ஆவார். நடப்பு காமன்வெல்த் அணியில் இருந்து ஜூடோ பிரிவில் கழற்றி விடப்பட்ட 2-வது இந்தியர் ஆவார்.
ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்த ஜூடோ வீரர் அருண்குமாரும் நீக்கப்பட்டார்.