15-வது முறையாக உலக சாதனையைத் தகர்த்தெறிந்த மாண்டோ டுப்லாண்டிஸ்

தனது சொந்த உலக சாதனையை 15-வது முறையாக முறியடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
15-வது முறையாக உலக சாதனையைத் தகர்த்தெறிந்த மாண்டோ டுப்லாண்டிஸ்
Published on

உப்சாலா,

ஸ்வீடனைச் சேர்ந்த மோண்டோ டுப்லாண்டிஸ், கம்பு ஊன்றித் தாண்டும் ’போல் வால்ட்’ விளையாட்டில் 15 வது முறையாக உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

உப்சாலாவில் நடைபெற்ற போட்டியில் 6.31 மீட்டர் உயரத்தைத் தாண்டி அசத்தியுள்ளார். இதன் மூலம் தனது சொந்த உலக சாதனையை 15-வது முறையாக முறியடித்துள்ளார். இவர் தனது முந்தைய சாதனையை (6.30 மீ) விட 1 செ.மீ உயரமாக தாண்டி இருக்கிறார்.

Also Read
உலகக் கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: பிபா
15-வது முறையாக உலக சாதனையைத் தகர்த்தெறிந்த மாண்டோ டுப்லாண்டிஸ்

அர்மண்ட் டூபிளான்டிஸ் உலக சாதனைகள் பட்டியல்:

6.17 மீ - பிப்ரவரி 08, 2020

6.18 மீ - பிப்ரவரி 15, 2020

6.19 மீ - மார்ச் 07, 2022

6.20 மீ - மார்ச் 20, 2022

6.21 மீ - ஜூலை 24, 2022

6.22 மீ - பிப்ரவரி 25, 2023

6.23 மீ - செப்டம்பர் 17, 2023

6.24 மீ - ஏப்ரல் 20, 2024

6.25 மீ - ஆகஸ்ட் 05, 2024

6.26 மீ - ஆகஸ்ட் 25, 2024

6.27 மீ - பிப்ரவரி 28, 2025

6.28 மீ - ஜூன் 15, 2025

6.29 மீ - ஆகஸ்ட் 12, 2025

6.30 மீ - செப்டம்பர் 15, 2025

6.31 மீ - மார்ச் 12, 2026

மேலும், நார்வே வீரர் சோண்ட்ரே குட்டோர்ம்சென் 6.00 மீ. உயரத்தை கடந்து இரண்டாம் இடத்திலும், அமெரிக்கர்கள் சாக் பிராட்போர்ட் மற்றும் சாம் கெண்ட்ரிக்ஸ், ஆஸ்திரேலியர் கர்டிஸ் மார்சல் ஆகியோர் 5.90 மீ. உயரத்தை கடந்து மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களையும் பிடித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com