இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி... ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்று இளவேனில் அசத்தல்!

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
இளவேனில்
Published on

நகோயா,

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிளில் இளவேனில் வெள்ளி வென்று அசத்தி இருக்கிறார்.

ஆசிய விளையாட்டு

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. 45 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகின்றன.

வெள்ளிப் பதக்கம்

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளவேனில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

சோனம் மாஸ்கர்

இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான சோனம் மாஸ்கர் 7-வது இடத்தை பிடித்தார்.

முன்னதாக, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவிலும் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர் மற்றும் விதார்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே நாளில் 2 பதக்கங்களை வென்று இளவேனில் அசத்தியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com