

மொனாக்கோ,
இந்த ஆண்டுக்கான பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் தொடர் 22 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் நேற்று மொனாக்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
260.282 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 11 அணிகளைச் சேர்ந்த 22 வீரர்கள் களமிறங்கினர். தொடக்கம் முதல் கடும் போட்டி நிலவிய நிலையில், இத்தாலியின் இளம் வீரர் கிமி அன்டோனெல்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முன்னாள் உலக சாம்பியனும், பெராரிஅணியின் நட்சத்திர வீரருமான லூயிஸ் ஹாமில்டன், ஆண்டொனெல்லியை விட 6.271 வினாடிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதேவேளை, ரெட் புல் ரேசிங் அணியைச் சேர்ந்த இசாக் ஹட்ஜார் மூன்றாவது இடத்தை கைப்பற்றினார்.
6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், கிமி ஆண்டொனெல்லி 156 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
பார்முலா 1 தொடரின் 7-வது சுற்றுப் போட்டி வரும் 14-ம் தேதி ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற உள்ளது. அங்கும் தனது வெற்றிப் பயணத்தை ஆண்டொனெல்லி தொடருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.