பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்

‘பார்முலா1’ கார்பந்தயத்தின் 13-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஸ்பா,

இந்த ஆண்டுக்கான 'பார்முலா1' கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.052 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் காரில் சீறிப் பாய்ந்தனர்.

இதில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி (மெக்லரன் அணி) 1 மணி 25 நிமிடம் 22.601 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிட்டியது. அவரைவிட 3.415 வினாடிகள் பின்தங்கிய இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) 2-வது இடத்தையும், மொனாக்கோவின் சார்லஸ் லெக்லெர்க் (பெராரி அணி) 3-வது இடத்தையும் பெற்றனர். நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதன் அடுத்த சுற்று பந்தயம் வருகிற 3-ந் தேதி ஹங்கேரியில் நடைபெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com