பிரெஞ்சு ஓபன் - இறுதிப்போட்டியில் போராடி வீழ்ந்த பி.வி.சிந்து

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வந்தது.
பி.வி.சிந்து
Published on: 

பாரிஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தார்.

இறுதிப்போட்டி

2026 பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வந்தது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.

போராடி தோல்வி

அரினா கிராண்ட் பாரிஸ் மைதானத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்து 21-16,11-21, 12-21 என்ற செட் கணக்கில் தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அன் சே யங்கிடம் போராடி வீழ்ந்தார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com