பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி

இகா ஸ்வியாடெக், ஆஸ்திரேலியாவின் எமர்சென் ஜோன்ஸ் உடன் மோதினார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் வெற்றி
Published on

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், ஆஸ்திரேலியாவின் எமர்சென் ஜோன்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவேனியாவின் வெரோனிகா எர்ஜவேவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com