பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா உடன் மோதினார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:  ரஷிய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சென்னை,

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com