

பெங்களூரு,
6 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான அலாஸ்கன் நைட்ஸ் அணி 6-11 என்ற கணக்கில் திரிேவணி கான்டினென்டல் கிங்சிடம் தோல்வியை தழுவியது. நைட்ஸ் அணியில் அர்ஜூன் எரிகைசி, யாஜிஸ் கான், நினோ பேட்சி யாஷிவிலி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.
ஆனந்த்- அலிரெஜா இடையிலான ஆட்டம் 59-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல் சென் தலைமையிலான நடப்பு சாம்பியன் அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் அணி 15-3 என்ற கணக்கில் அமெரிக்கன் கேம்பிட்சை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.