ஆசிய செஸ் போட்டியில் தங்கம் - தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் -அமைச்சர் விஜய் வாழ்த்து

’பிடே’ மகளிர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள சவிதா ஸ்ரீக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய செஸ் போட்டியில் தங்கம் - தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் -அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

21-வது ஆசிய மகளிர் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ’பிடே’ மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னை வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியனாக சவிதாஸ்ரீ

மங்கோலியாவின் தலைநகர் உலான்பத்தாரில் நடைபெற்ற 21-வது ஆசிய மகளிர் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 9 சுற்றுகள் கொண்டதாக நடைபெற்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சவிதா ஸ்ரீ , 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், இந்த வெற்றியின் மூலம் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ’பிடே’ மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"மங்கோலியா நாட்டின் தலைநகரான உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2026-ல் தங்கப் பதக்கம் வென்றதோடு, 2027 ’பிடே’ மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com