கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: பிரான்ஸ் வீரர் ‘சாம்பியன்’

இந்தியாவின் பிரனேஷ்- நிஹால் சரின் இடையிலான மோதலும் டிராவில் முடிந்தது.
கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: பிரான்ஸ் வீரர் ‘சாம்பியன்’
Published on

சென்னை,

4-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் நடந்தது. 8 வீரர்கள் பங் கேற்ற இந்த போட்டியில் 7-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. புள்ளிபட்டியலில் முன்னணி வகித்த பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜா தனது கடைசி லீக்கில் இந்தியாவின் அர்ஜூன் எரிகசியுடன் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 19-வது நகர்த்தலில் தன்னை எதிர்த்த அமெரிக்காவின் ஹான்ஸ் நிமானிடம் டிரா கண்டார்.

இந்தியாவின் பிரனேஷ்- நிஹால் சரின் இடையிலான மோதலும் டிராவில் முடிந்தது.

இறுதி சுற்று முடிவில் அலிரெஜா 4.5 புள்ளிகளுடன் (2 வெற்றி, 5 டிரா) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டிமிட்ரி 4 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 6 டிரா) 2-வது இடத்தையும், இந்தியா வின் எரிகைசி 4 புள்ளியுடன் (2 வெற்றி. 4 டிரா, ஒரு தோல்வி) 3-வது இடத்தையும் பெற்ற னர். குகேஷ் 2 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com