

சண்டிகார்,
ஜப்பானின் நகோயாவில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்க லம் என மொத்தம் 85 பதக்கங்கள் குவித்து 4-வது இடத்தை பிடித்தது. இதில் அரியானா மாநில வீரர், வீராங்கனைக ளின் பங்களிப்பே அதிகம். அவர்கள் மட்டும் 14 தங்கம். 9 வெள்ளி, 9 வெண்கலம் என 32 பதக்கங்கள் வென்றிருக்கி றார்கள். 14 தங்கத்தில் 5 தனிநபர் பிரிவிலும், 9 அணிகள் பிரிவிலும் கிடைத்தது. மகுடம் சூடிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா. குத்துச்சண்டை நட்சத்திரங்கள் பர்வீன் ஹூடா, அங்குஷ் பன்ஹால், மல்யுத்த வீரர்கள் சுஜீத். அமன் செராவத் ஆகியோர் அரியானாவைச் சேர்ந்தவர்கள் தான்.
போட்டியில் பங்கேற்று திரும்பிய அவர்களுக்கு நேற்று அந்த மாநில அரசு சார்பில் விளையாட்டுத்துறை மந்திரி கவுரவ் கவுதம் உற்சாக வரவேற்பு அளித்தார். அவர்களின் சிறப்பான செயல்பாடு, அரியானாவின் விளையாட்டு வலிமையை பறைசாற்றுவதாக பாராட்டினார்.