10 ஆண்டுக்கு பிறகு பட்டம் வென்றார், சரத்கமல்

சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில், 10 ஆண்டுக்கு பிறகு சரத்கமல் பட்டம் வென்றார்.
10 ஆண்டுக்கு பிறகு பட்டம் வென்றார், சரத்கமல்
Published on

மஸ்கட்,

சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 37 வயதான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 2010-ம் ஆண்டு எகிப்து ஓபனை வென்ற பிறகு சொந்தமாக்கிய முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com