ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்; இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தன்யா ஹேமந்த் தோல்வி

இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஜப்பானின் ஆயா ஓஹோரி உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், ஜப்பானின் ஆயா ஓஹோரி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆகர்ஷி காஷ்யப் 15-21, 9-21 என்ற செட் கணக்கில் ஆயா ஓஹோரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் தன்யா ஹேமந்த் 16-21, 21-23 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் கோமாங் ஆயு காஹ்யா தேவியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com