ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட லக்சயா சென்

இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லி ஷிபெங் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லி ஷிபெங் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய லி ஷிபெங் 21-15, 21-12 என்ற செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com