ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட சாத்விக்-சிராக் ஜோடி

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஹூங் ஹோம்பேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் லியாங் வெய் கெங்-வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி கைப்பற்றியது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது மற்றும் 3வது செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாங் வெய் கெங்-வாங் சாங் ஜோடி 21-14, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com