காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா 8 பதக்கம் வெல்லும் - நிகத் ஸரீன் கணிப்பு..!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியா 8 பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்ப்பதாக நிகத் ஸரீன் கூறியுள்ளார்.
image courtesy: BFI via ANI
image courtesy: BFI via ANI
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டில் குத்துச்சண்டை பந்தயத்தில் இந்தியா சார்பில் 12 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு குத்துச்சண்டையில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 9 பதக்கங்களை குவித்தது.

இந்த முறை பதக்க வாய்ப்பு குறித்து 52 கிலோ பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய வீராங்கனை 26 வயதான நிகத் ஸரீன் நேற்று அளித்த பேட்டியில், 'காமன்வெல்த் குத்துச்சண்டையில் 4 தங்கம் உள்பட குறைந்தது 8 பதக்கம் வெல்வோம் என்று எதிர்பார்க்கிறேன். குத்துச்சண்டை அணியில் உள்ள அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். நாங்கள் உலக குத்துச்சண்டையில் பதக்கம் வென்றுள்ளோம். ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்கம் வெல்வார்கள் என்று நம்புகிறேன். தேசத்துக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அதே வேட்கையுடன் நான் உள்ளேன்' என்றார்.

2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டையில் புதிய எடைப்பிரிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கு ஏற்ப காமன்வெல்த் விளையாட்டில் நிகத் ஸரீன் 50 கிலோ எடைப்பிரிவுக்கு மாறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com